📻 1895ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.
👉 1952ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
முக்கிய தினம் :-
👥 உலக ஆஸ்துமா தினம் மே மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை (மே 7) அனுசரிக்கப்படுகிறது.
👥 ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. மேலும் இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.
👥 சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது.
பிறந்த நாள் :-
🎼 இந்திய தேசிய கீதத்தை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.
🎼 இவர் 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும் மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.
🎼 இவருடைய கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
🎼 ஆங்கிலேய அரசு 1915ஆம் ஆண்டு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1919ஆம் ஆண்டு அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து சர் பட்டத்தை திருப்பி கொடுத்துவிட்டார்.
🎼 இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் மற்றும் குருதேவ் என்று அழைக்கப்பட்ட இவர் 80வது வயதில் (1941) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
351 – உரோமைப் பேரரசின் தளபதி கான்சுடான்டியசு காலசுவிற்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலசு அந்தியோக்கியாவுக்கு சென்ற பின்னர், யூதர்கள் பாலத்தீனத்தில் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
558 – கான்ஸ்டண்டினோபில் நகரில் ஹேகியா சோபியாவின் குவிமாடம் இடிந்து வீழ்ந்தது.
1664 – பிரான்சின் பதினான்காம் லூயி வெர்சாய் அரண்மனையை நிர்மாணிக்க ஆரம்பித்தார்.
1697 – சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரின் நடுக்காலப் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது. இது 18-ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது.
1832 – கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
1840 – ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர்.
1895 – உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் உருசியாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1915 – முதலாம் உலகப் போர்: செருமனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 128 பேர் அமெரிக்கர் ஆவர்.
1920 – போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் கம்யூனிச செஞ்சேனைப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
1920 – சோவியத் உருசியா ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.
1927 – நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1930 – 7.1 அளவு நிலநடுக்கம் வடமேற்கு ஈரானையும், தென்கிழக்கு துருக்கியையும் தாக்கியதில் 3000 பேர் வரை உயிரிழந்தனர்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: செருமனியின் கொண்டோர் லீஜியன் படைப்பிரிவு பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு உதவியாக எசுப்பானியா வந்து சேர்ந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: பவளக் கடல் சமரின் போது, அமெரிக்கக் கடற்படையின் வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று சோகோகோ என்ற சப்பானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோடில் செருமனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார். அடுத்த நாள் இது அமுலுக்கு வந்தது.
1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்டது.
1952 – நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954 – வியட்நாமில் “தியன் பியன் பு” சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
1960 – பனிப்போர்: அமெரிக்காவின் யூ-2 போர் வானூர்தியின் விமானி காரி பவர்சு என்பவரைத் தாம் பிடித்து வைத்திருப்பதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் அறிவித்தார்.
1986 – ஏழு கொடுமுடிகளிலும் ஏறிய முதலாவது மனிதர் என்ற சாதனையை பாட்ரிக் மரோ என்ற கனடியர் ஏற்படுத்தினார்.
1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து பெப்ரவரியில் திருடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் (ஓவியம்) மீளக் கைப்பற்றப்பட்டது.
1999 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உருமேனியா சென்றார். 1054 இல் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் கிழக்கு மரபுவழி திருச்சபை நாடொன்றுக்கு திருத்தந்தை சென்றது இதுவே முதல் தடவையாகும்.
1999 – கொசோவோ போர்: நேட்டோவின் போர் விமானம் ஒன்று பெல்கிறேட் நகரில் சீனத் தூதரகம் மீது தவறுதலாகக் குண்டு வீசியதில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
1999 – கினி-பிசாவு நாட்டின் அரசுத்தலைவர் ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2000 – விளாதிமிர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
2002 – சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் உயிரிழந்தனர்.
2004 – அமெரிக்கத் தொழிலதிபர் நிக் பெர்க் இசுலாமியத் தீவிரவாதிகளால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படும் காட்சி காணொளியாக இணையத்தில் வெளியிடப்பட்டது.
2007 – உரோமைப் பேரரசர் முதலாம் ஏரோதின் கல்லறை எருசலேம் நகருக்கருகில் இசுரேலியத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.
இன்றைய தின பிறப்புகள்
1711 – டேவிடு யூம், இசுக்கொட்டிய பொருளியலாளர், வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1776)
1814 – ராபர்ட் கால்டுவெல், அயர்லாந்து திராவிட மொழியியலாளர் (இ. 1891)
1819 – ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1905)
1833 – ஜொகான்னெஸ் பிராம்ஸ், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1897)
1840 – பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி, உருசிய இசைமைப்பாளர் (இ. 1893)
1861 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)
1880 – பாண்டுரங்க வாமன் காணே, இந்திய இந்தியவியலாளர், சமக்கிருந்த அறிஞர் (இ. 1972)
1883 – தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1941)
1892 – சோசப்பு பிரோசு டிட்டோ, யூகொசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (இ. 1980)
1901 – கேரி கூப்பர், அமெரிக்க நடிகர் (இ. 1961)
1919 – இவா பெரோன், அர்ச்செந்தீன நடிகை (இ. 1952)
1927 – ரூத் பிராவர் ஜாப்வாலா, செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2013)
1935 – அ. மா. சாமி, தமிழக எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் (இ. 2020)
1949 – சு. திருநாவுக்கரசர், தமிழக அரசியல்வாதி
1968 – கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
1971 – தாமசு பிக்கெட்டி, பிரான்சிய பொருளியலாளர்
1984 – கெவின் ஓவன்சு, கனடிய மற்போர் வீரர்
1987 – சந்தீப் கிசன், தெலுங்குத் திரைப்பட நடிகர்
1989 – அதர்வா, தமிழகத் திரைப்பட நடிகர்
இன்றைய தின இறப்புகள்
1617 – டேவிட் பாப்ரிசியசு, செருமானிய வானியலாளர், இறையியலாளர் (பி. 1564)
1825 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1750)
1964 – பி. கண்ணாம்பா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1910)
1990 – சாம் தம்பிமுத்து, இலங்கை அரசியல்வாதி (பி. 1932)
2011 – வில்லார்டு பாயில், நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர் (பி. 1924)
2015 – அமலெந்து குகா, இந்திய வரலாற்றாசிரியர், கல்வியாளர், நூலாசிரியர் (பி. 1924)
2021 – எம். ஒய். இக்பால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பி. 1951)
இன்றைய தின சிறப்பு நாள்
வானொலி நாள் (உருசியா, பல்காரியா)