திருவலம் அடுத்த செம்பராயநல்லூர் புதூரைச் சேர்ந்த பாண்டு மனைவி சின்ன குழந்தை (70). நேற்று முன்தினம் மாலை ஆற்காட்டிலிருந்து வேலூருக்கு அரசுடவுன்பஸ்ஸில் வந்துகொண்டிருந்தார்.
பஸ் சமத்துவபுரம் அருகே சென்றபோது பின் சக்கரடயர் வெடித்தது.
சின்னகுழந்தை இருக்கை அடியே மரக்கட்டை உடைந்து காலில் விழுந்ததில் கால் எலும்பு முறிந்தது. வாலாஜா ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மூதாட்டியின் மருமகள் லதா திருவலம் போலீசில் புகாரளித்தார். எஸ்ஐ குருமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.