ராணிப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் வசித்து வரும் மலர்கொடி(49), இவர் கணவர் குமார் இறந்து விட்டார். மகன்கள் மணிகண்டன்(22). அரிஷ்(20) ஆகியோருடன் வசித்து வந்தார். மணிகண்டன் ராணிப்பேட்டை பழைய பாலாற்று மேம்பாலம் அருகில் வைக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தாராம்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மணிகண்டன் மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அதைப் பார்த்த அவரின் தாயார் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாயே? மது போதைக்கு அடிமையாகி விட்டாயே என்று திட்டியுள்ளார்.

தாய் திட்டியதால் மனவே தனை அடைந்த மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே சென்சென்றுவிட்டார். இதையறிந்த அவரின் தாயார் இளைய மகன்; அரிஷ், மணிகண்டனின் நண்பர்கள் பாஷா, ஏசுதாஸ் ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை தேடியுள்ளார். அப்போது அவர் பாலாற்றின் மீது புதியதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம். பாலத்தின் மீது அமர்ந்திருப்பதை கண்டனர்.

உடன் அருகில் சென்றனர்.; அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் மணிகண்டன் பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து மலர்கொடி ராணிப்பேட்டை; போலீசில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.