கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவை போன்று தமிழ்நாட்டிலும் ஷவர்மாவுக்கு தடை விதிக்க ஆலோசித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.