ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, அமைச்சருமான காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (25 ம் தேதி) புதன்கிழமை மாலை 4 மணி அளவில் நடக்கிறது.

அவைத்தலைவர் அசோகன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், வரும் 28ம் தேதி ஓமந்தூரார் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா, கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

எனவே இக்கூட்டத்தி மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்கு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, டவுன் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்னர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.