ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் தேவன். இவரது மகள் சுமித்ரா (24). ராணிப்பேட்டை அருகே உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் தர்மநீதி கிராமத்தில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து காவேரிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சுமித்ராவின் தாயார் வீரம்மாள் புகார் அளித்தார். சப்இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.