When is Narasimha Jayanti 2022? Date, Significance, Puja Muhurat, Fasting Rules and Rituals
மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
சிங்க தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரம், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு நொடிப்பொழுதில் பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம். இரணியனிடம் இருந்து பக்த பிரகலாதனை காப்பதற்கு எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்மர் அவதாரம். பலபேருக்கு இந்த பக்தப் பிரகலாதன் கதை தெரிந்திருந்தாலும், இந்த புனித நாளில் இதை ஒரு முறை நினைவு கூறுவதில் ஒன்றும் தவறு இல்லை.
கேட்ட வரத்தை பக்தர்களுக்கு உடனே தரும் நரசிம்மரை போற்றக்கூடிய, நரசிம்ம ஜெயந்தி விரதமானது இந்த வருடம் மே மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. நரசிம்மர் ஜெயந்தி விரதம் உருவான வரலாறு என்ன என்பதை பற்றியும், நரசிம்மர் ஜெயந்தி விரதத்தை சுலபமாக எல்லோரும் எப்படி கடைப்பிடிக்கலாம், என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. சிங்க தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரம், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு நொடிப்பொழுதில் பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம். இரணியனிடம் இருந்து பக்த பிரகலாதனை காப்பதற்கு எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்மர் அவதாரம். பலபேருக்கு இந்த பக்தப் பிரகலாதன் கதை தெரிந்திருந்தாலும், இந்த புனித நாளில் இதை ஒரு முறை நினைவு கூறுவதில் ஒன்றும் தவறு இல்லை.
பூமியில் அரக்கனாக பிறந்து, சிவபெருமானிடம் சாகாவரம் பெற்றவன் தான் இரணியன். ‘பகல் பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது! இரவு பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது! மனிதனாலும் மரணம் நிகழக் கூடாது! மிருகத்தாலும் மரணம் நிகழக் கூடாது! ஆகாயத்திலும் மரணம் ஏற்படக்கூடாது! பூமியிலும் மரணம் ஏற்படக்கூடாது! எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது!’ என்றவாறு வரத்தைப் பெற்ற இந்த அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர் நரசிம்மர்.
வழக்கம்போல சாகாவரம் பெற்ற அரக்கர்களை போலவே இரணியனின் அட்டகாசமும் பூலோகத்தில் தலைவிரித்து ஆடியது. காலப்போக்கில் இரணியனுக்கு மகனாக பிரகலாதன் பிறந்தான். ஆனால், அரக்கன் இரணியனுக்கு பிறந்த பிரகலாதனோ, நாராயணனின் தீவிர பக்தனாக இருந்தான். என்னேரமும் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை உச்சரித்து கொண்டிருப்பதே தன் கடமையாக வைத்திருந்தான்.
இதைப்பார்த்த இரணியனுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டு விட்டது. ‘இந்த லோகத்தில் இறைவன் என்றால் அது நான் தான்’. அதாவது இரணியன் தான். நாராயணன் என்ற மந்திரத்தை தவிர்த்துவிட்டு, ‘ஓம் இரண்யாய நமஹ’ என்ற மந்திரத்தை கூறும்படி பிரகலாதனை கொடுமைப்படுத்தினான், இரணியன். பிரகலாதன், தன் மகன் என்ற இரக்ககுணம் கூட இரணியனுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரணியன், எவ்வளவு கடுமையாக சொல்லியும் தன் மகன் பிரகலாதன், தன் தந்தை சொல்லைக் கேட்காமல் ‘ஓம் நமோ நாராயண’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான். தன் மகன், தன் சொல்லைக் கேட்காத கோபத்தில் இரணியன், தன் தங்கையை அழைத்து பிரகலாதனை நெருப்பில் இடும்படி உத்தரவிட்டான். இரணியனின் தங்கை ஹோலிகா, பிரகலாதனை அழைத்து தீக்கிரையாக்கினாள்.
ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தீயில் இறங்கிய பிரகலாதனுக்கு எதுவுமே நடக்கவில்லை. ஆனால் தீயின் மூலம் தனக்கு ஆபத்து நேரவே நேராது என்று வரத்தை வாங்கிய ஹோலிகா தீக்கிரையாகி விட்டாள். காரணம் அவளின் கெட்ட எண்ணம் தான். இதை கண்ட இரணியனுக்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது. இரணியன், பிரகலாதனை அழைத்து துன்புறுத்தி, எங்கே உள்ளார் உன்னுடைய நாராயணன்? என்று கேள்வி கேட்டு துன்புறுத்தினான்.
பிரகலாதனோ! தூணிலும் இருப்பார் நாராயணர், துரும்பிலும் இருப்பார் நாராயணர் என்றவாறு கூறினான் அந்த சிறுவன். இதனைக் கேட்டு இன்னும் கோபம் அடைந்த இரணியன் ‘தூணிலும் இருப்பாரா உன் நாராயணன்! என்று ஆணவத்தோடு சிரித்தான்!’ அருகிலிருந்த தூணை தன் கையிலிருந்த கடையால் உடைத்தான் இரணியன். இந்த நேரம் பகலும் இல்லாத, இரவும் இல்லாத பிரதோஷ காலமான மாலை நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரணியன் அந்த துணை தாக்கிய அந்த நிமிடத்தில் தான் மகாவிஷ்ணு, மனிதரும் இல்லாத, மிருகமும் இல்லாத நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்தார். கோபத்தோடு, ஆக்ரோஷத்தோடு இரணியனை ஆகாயத்திலும் வைக்காமல், பூமியின் வைக்காமல் தூக்கி தன் மடியில் வைத்து, எந்த ஒரு ஆயுதத்தையும் பயன்படுத்தாமல், தன்னுடைய பத்து கைகளில் உள்ள விரல்களில் கூர்மையான நகங்களால் வயிற்றை கிழித்து, ரத்தத்தை குடித்து, குடலை உருவி மாலையாக போட்டுக்கொண்டு இரணியனை வதம் செய்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு கதை.
ஆனால் இந்த வதம் முடிந்த பின்பும் நரசிம்மரின் கோபம் மட்டும் அடங்கவே இல்லை. இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் நரசிம்மரை கண்டு பயந்து ஒதுங்கி நிற்க, பிரகலாதன் மட்டும் நரசிம்மரின் அருகில் சென்று வணங்கினான். மனம் குளிர்ந்த நரசிமரோ! பிரகலாதனை அழைத்து தன் மடியில் அமரச்செய்து, ‘எதற்காக நாராயணர் தூணில் இருப்பார் என்று முதலில் கூறினாய்? துரும்பில் இருப்பார் என்று சொல்லி இருந்தால் உடனடியாக துரும்பில் இருந்து அவதாரம் எடுத்திருப்பேனே! தூணை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. துணியிலிருந்து வெளிவரும்வரை, அவ்வளவு நேரமும், நீ துன்பத்தை அடைந்திருக்க வேண்டாம். என்று கூறினார்.
கூப்பிட்ட குரலுக்கு கூப்பிட்ட மார்க்கத்தில், வந்து உதவி செய்யும் குணம் கொண்டவர்தான் நரசிம்மர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் எடுத்த அவதாரம் தான் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதே தவிர, அவருடைய மனம் மிகவும் மென்மையானது என்பது இதுவே ஒரு உதாரணம். தன்னை முழுமையாக நம்பிய பக்தனுக்கு உடனே வரம் தரும் தெய்வம் தான் நரசிம்மர். அவர் தூணியிலிருந்து, தன் பக்தன் பிரகலாதனுக்காக, நரசிம்ம அவதாரம் எடுத்த இந்த நாளை தான், நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றோம்.
நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து, தீபம் ஏற்றி வைத்து, நரசிம்மரை மனதார வேண்டிக் கொண்டு, தூய்மையான பக்தியில் எவரொருவர் தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக நல்ல தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? பூஜை செய்யலாமா? என்ற சந்தேகம் அனேக பக்தர்களுக்கு உள்ளது.
பக்த பிரகலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லட்சுமி தேவியை மடியில் அமரவைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். நரசிம்மர், விஷ்ணுவின் அம்சம் என்பதால் இவருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இது தவிர, செவ்வரளி சிகப்பு செம்பருத்தி போன்ற பூக்களையும் நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்யலாம்.
நரசிம்மர் ஜெயந்தி தினத்தன்று மாலை 6.30 மணியிலிருந்து 7.20 மணிக்குள் உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்கு படைக்கலாம். அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதமிருந்து, நரசிம்ம ஜெயந்தி விரதத்தை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும்