India Considers Tax Cut On Soybean And Sunflower Oil To Cool Prices
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து- மத்திய அரசு அதிரடி..
எண்ணெய் விலை குறையும்!
சமீப காலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தொடர் விலை உயர்வை கருத்தில் கொண்டு சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வீதம் கச்சா சோயா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்யலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இதனால், சமையல் எண்ணெய் விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.