குறள் : 762

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது

மு.வ உரை :

போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.

கலைஞர் உரை :

போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை :

தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்?, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.

Kural 762

Ulaivitaththu Ooranjaa Vankan Tholaivitaththuth
Tholpataik Kallaal Aridhu

Explanation :

Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat fearless of wounds and unmindful of its reduced strength.

Horoscope Today: Astrological prediction for May 27, 2022


இன்றைய ராசிப்பலன் - 27.05.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

27-05-2022, வைகாசி 13, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பகல் 11.48 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 02.26 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பின்இரவு 02.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Nalla neram

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 27.05.2022 | Today rasi palan - 27.05.2022

மேஷம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சிறு தடை தாமதத்திற்குப் பின் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். 

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து உடல்நிலை சீராகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நற்பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். ஆரோக்கிய ரீதியாக இருந்த மனகவலைகள், குழப்பங்கள் விலகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் புது நம்பிக்கையை அளிக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். திடீர் செலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய சிந்தித்து செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

கும்பம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001