குறள் : 754
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
மு.வ உரை :
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல் சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
கலைஞர் உரை :
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.
சாலமன் பாப்பையா உரை :
நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.
Kural 754
Araneenum Inpamum Eenum Thiranarindhu
Theedhindri Vandha Porul
Explanation :
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.
Horoscope Today: Astrological prediction for May 19, 2022
இன்றைய ராசிப்பலன் - 19.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
19-05-2022, வைகாசி 05, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.24 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 03.17 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 19.05.2022 | Today rasi palan - 19.05.2022
மேஷம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று பொருளாதார ரீதியான நெருக்கடிகள் சற்று குறையும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று பணவரவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் அலைச்சலுக்கேற்ப அனுகூலப்பலன் கிட்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு
இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். எதிலும் நிதானம் தேவை.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சாதகமான பலன் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியாக இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.