குறள் : 750

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்ல தரண்


மு.வ உரை :

எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும் செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை


கலைஞர் உரை :

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.


சாலமன் பாப்பையா உரை :

எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.


Kural 750

Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi

Illaarkan Illadhu Aran


Explanation :

Although a fort may possess all (the above-said) excellence it is as it were without these if its inmates possess not the excellence of action.


Horoscope Today: Astrological prediction for May 14, 2022



இன்றைய ராசிப்பலன் -  14.05.202 | Indraya Rasi Palan

இன்றைய  பஞ்சாங்க | Indraya Panchangam

14-05-2022, சித்திரை 31, சனிக்கிழமை, திரியோதசி திதி பகல் 03.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. சித்திரை நட்சத்திரம் மாலை 05.27 வரை பின்பு சுவாதி. மரணயோகம் மாலை 05.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் | Indraya Nalla neram

காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00


இன்றைய ராசிப்பலன் -  14.05.2022 | Today rasi palan - 14.05.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்

ரிஷபம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். இருக்கும் இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். தேவைகள் பூர்த்தியாகும்

மிதுனம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் நன்மை அடைவீர்கள்

கடகம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைபடலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்

சிம்மம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள்

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் இருக்கும் மறைமுக பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்

மகரம்

இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக கடந்த கால சிக்கல்கள் சற்று குறையும்

கும்பம்

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது சிறப்பு.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001