குறள் : 746
எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
மு.வ உரை :
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய் போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
கலைஞர் உரை :
போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை :
உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.
Kural 746
Ellaap Porulum Utaiththaai Itaththudhavum
Nallaal Utaiyadhu Aran
Explanation :
A fort is that which has all (needful) things and excellent heroes that can help it against destruction (by foes).
Horoscope Today: Astrological prediction for May 10, 2022
இன்றைய ராசிப்பலன் - 10.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
10-05-2022, சித்திரை 27, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 07.25 வரை பின்பு வளர்பிறை தசமி. மகம் நட்சத்திரம் மாலை 06.39 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla neram
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 10.05.2022 | Today rasi palan - 10.05.2022
மேஷம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை சீராகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன்கள் குறையும்.
மிதுனம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.
கடகம்
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்லது நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பிரச்சினை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் இருக்கும் நெருக்கடிகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
விருச்சிகம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும்.
தனுசு
இன்று அசையா சொத்துக்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
மகரம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக செயல்படவும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001