குறள் : 745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
மு.வ உரை :
பகைவரால் கைப்பற்ற முடியாததாய் தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய் உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.
கலைஞர் உரை :
முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை :
பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.
Kural 745
Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar
Nilaikkelidhaam Neeradhu Aran
Explanation :
A fort is that which cannot be captured which abounds in suitable provisions and afords a position of easy defence to its inmates.
Horoscope Today: Astrological prediction for May 09, 2022
இன்றைய ராசிப்பலன் - 09.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
09-05-2022, சித்திரை 26, திங்கட்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.33 வரை பின்பு வளர்பிறை நவமி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 05.07 வரை பின்பு மகம். சித்தயோகம் மாலை 05.07 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla neram
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 09.05.2022 | Today rasi palan - 09.05.2022
மேஷம்
இன்று பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும்.
மிதுனம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
சிம்மம்
இன்று உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். மன அமைதி ஏற்படும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழிலில் நற்பலனை தரும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 05.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று குழப்பத்துடன் இருப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
மகரம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.07 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
கும்பம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் புதிய முறையை கையாண்டு நற்பலனை அடைவீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001