குறள் : 744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்

மு.வ உரை :

காக்க வேண்டிய இடம் சிறியதாய் மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய் தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

கலைஞர் உரை :

உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை :

காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

Kural 744

Sirukaappir Peritaththa Thaaki Urupakai
Ookkam Azhippa Tharan

Explanation :

A fort is that which has an extensive space within but only small places to be guarded and such as can destroy the courage of besieging foes.


Horoscope Today: Astrological prediction for May 08, 2022

இன்றைய ராசிப்பலன் - 08.05.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

08-05-2022, சித்திரை 25, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி மாலை 05.00 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூசம் நட்சத்திரம் பகல் 02.57 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Nalla neram


மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 08.05.2022 | Today rasi palan - 08.05.2022

மேஷம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களினால் அனுகூலப் பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம்.

கடகம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடை பெறும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும்.

கன்னி

இன்று உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு குறையும்.

துலாம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களிடம் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

மகரம்

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த கடன் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் புதிய முயற்சிக்கு நற்பலன் கிடைக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001