வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வேலுாரில் இரவு 7.30 மணியளவில் லேசாக மழை பெய்தது. பின்னர் பலத்த மழையாக மாறி சுமார் அரைமணி நேரம் கொட்டித்தீர்த்தது.

இதனால், சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓட்டியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி. குளம்போல் காணப்பட்டது. மழை காரணமாக வேலூர் மாநகரம் குளிர்ந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை பெய்த மழையளவு: 


  • குடியாத்தம் 42 மி.மீ, 
  • மேலாலத்துார் 30 மி.மீ, 
  • பொன்னை 6.6 மி.மீ, 
  • அம்முண்டி 3.6 மி.மீ, 
  • காட்பாடி 3, 
  • வேலுார் 2. 8 மி.மீட்டர் 

மழை பதி வானது.