சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கிறது. வெப்பச்சலனமும் உள்ளது. அதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19ம் தேதி (நாளை) வட உள்தமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலுார், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.