தமிழ் சினிமால Coming Age Romedy Genre -ல பெரிய ஹூரோ படம் வர்றது ரொம்ப அரிது. இந்தி சினிமால YJHD மாதிரி Coming Age Romedy Genre -ல நிறைய படம் வந்துருக்கு. இந்த வகைமையை கையில் எடுத்த இயக்குனர் Cibi Chakaravarthi யை பாராட்டலாம்.
இந்த படங்கள் வெற்றி பெற இளைஞர்கள் தான் முழு முதற்காரணம். அப்படி இளைஞர்களை மட்டும் டார்கெட் செஞ்சு வந்துருக்கு இந்த டான்.
முதல் பாதி முழுக்க காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆகிருக்கு. முக்கியமா பிரியங்கா மோகன் - சிவகார்த்திகேயன் ஸ்கூல் சீன்ஸ் எல்லாம் சூப்பர். பர்ஸ்ட் ஆஃப் முழுக்க காமெடி, காமெடி, காமெடி.
சில சீன்ஸ் மேம்போக்கான மேக்கிங் இருந்தாலும் அதெல்லாம் பெரிய குறையா தெரியல. 6 நல்ல சீக்வன்ஸ் முதல்பாதியை காப்பாத்திடுது.
சிவகார்த்திகேயன் டான்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. பாட்டுக்கு ஏத்த உதட்டசைவு உட்பட எல்லாம் பக்கா. சில சீன்ஸ்ல பிரியங்கா மோகன் நடிப்பு அபாரம். சிவாவையே சில சீன்ல முந்திட்றாங்க.
இரண்டாம் பாதி ஆரம்பத்தில் சுமாரா போனாலும் ஒரு ஹாஸ்டல் சீன்ல மொத்த படமும் அடுத்த லெவலுக்கு போயிடுது. இரண்டாம் பாதில தான் மைய கதாபாத்திரத்துக்கு இலக்கு வர்றதால முதல்பாதி திரைக்கதை இரண்டாம் பாதிக்கு எந்த விதத்திலும் உதவல.
படத்தோட அடுத்தடுத்த காட்சிகள் ஊகிக்க கூடியதா இருந்தாலும் சில தருணங்கள் குறிப்பாக எஸ் ஜே சூர்யா வர்ற சீன்ல எல்லாம் தியேட்டர் மொமண்ட் நல்லா வந்திருக்கு. அனிருத் ரொம்ப அடக்கி வாசிச்ச படம் இதான்.
3 இடியட்ஸ் சாயல் அங்கங்க தெரிஞ்சாலும் கிளைமாக்ஸ், முன் கிளைமாக்ஸ் காட்சி படத்தை காப்பாத்திடுது. சமுத்திரக்கனி நடிப்பு ரொம்ப செயற்கையா இருந்தது ஒரு குறை. சிவகார்த்திகேயன் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிச்சவஙக செம்ம தேர்வு.
திரைக்கதை, கதாப்பாத்திர வடிவமைப்பு இன்னும் நல்லா பண்ணிருநதா படம் காலம் கடந்தும் நினைவில் இருந்திருக்கும்.
First Half - Very Good
Second Half - OK
#DON ⭐⭐⭐/5
Review by Aathi Sivalingam