அதி தீவிர வெப்பநிலையால் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே சுற்றவேண்டாம் சூழலியலாளர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

இந்நிலையில் கடந்த 120 ஆண்டுகளில் ஏப்ரல் மாதங்களில் பதிவான வெப்பநிலையிலேயே இந்த ஆண்டு உச்சத்தை எட்டியுள்ளதாக சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதி தீவிர வெப்பநிலையால் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும், அதிதீவிர வெப்பத்தால் மாரடைப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் எச்சரித்துள்ளார்.