திண்டுக்கல்: திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில், மருத்துவ குணம் கொண்ட தேங்காய் பூ விற்பனை அதிகரித்து வருகிறது. ஒரு பெரிய அளவிலான தேங்காய் பூ, 70 முதல் நுாறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக தேங்காய் பூவிற்பனை செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:

தென்னங்கன்று வளர்ப்பதற்காக முற்றிய தேங் காய்கள், விளை நிலங்களில் நடவு செய்யப்படுகிறது. இந்த தேங்காய் நாற்றுகள் ஒரு அடி உயரம் வந்த வுடன், இதனை வேரோடு பறித்து, தேங்காய் பூக்களாக விற்பனைக்கு வருகிறது. விவசாயிகள், தங்கள் நிலங்களில் தேங்காய் பூ தயாரிப்புக்காக, முற்றிய தேங்காய்களை நடவு செய்கின்றனர். தேங்காயில் இருந்து நாற்று வெளியில் வரத் தொடங்கியதும், குறிப்பிட்ட நாட்களில் அவற்றை எடுத்து, சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். மொத்த வியாபர் ரிகள், அவற்றை பெரிய லாரிகளில் கொண்டுவந்து; சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஏறக்குறைய இளநீர் வினியோகம் போன்றதுதான், சிறிய தேங்காய் பூ 60 ரூபாய்க்கும், பெரிய அளவிலான தேங்காய் பூ 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஓரளவு நல்ல லாபமும் கிடைக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் நா வறட்சி, கசப்புத் தன்மையை நீக்குவது, நீர் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி, ரத்தம் சுத்திகரிப்பது உட்பட பல பிரச்னைகளுக்கு தேங்காய் பூ நிவாரணியாக உள்ளதால், மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.