கோடையின் உச்சமான ‘அக்னி நட்சத்திரம்' இன்று தொடங்குகிறது. உச்சகட்ட வெப்பம் தகிக்கும் அக்னி தொடங்குவதற்கு முன்ன தாகவே, வெயிலின் கோரத்தாண்டவத்தில் வேலுார் மாவட்டம் சிக்கித்தவிக்கிறது.

இந்நிலையில், இன்று தொடங்கும் அக்னி நட்சத்திரத்தால் வெயிலின் தாக்கம் மேலும் அதி கரிக்கக் கூடும் என வேலுார் மாநகர மக்கள் பீதயில் உள்ளனர். பொதுவாகவே, வேலுார் மற்றும் ராணிபெட்டை மாவட்டத்தில் கத்திரி வெயில் காலகட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் வறுத்தெடுக்கும்.

இந்த ஆண்டில் தொடக்கமே அமர்க்களமாக இருப்பதால், கத்திரியை எப்படி சமாளிக்க போகிறோமோ என்ற அச்சத்திலும், கோடை மழை பெய்தால் வெப்பம் ஓரளவு தணியும் என்ற எதிர்பார்ப்பிலும் வேலுார் மற்றும் இராணிபெட்டை நகர மக்கள் உள்ளனர்.