தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கியது முதல் வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று(ஏப்.,30) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக28 டகிரி செல்சியஸ் பதிவாகக்கூடும் எனக்கூறியிருந்தது.

இந்நிலையில், 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 110.66 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து அரியலூர்- 108 டிகிரி பாரன்ஹீட்

திருவண்ணாமலை -107 டிகிரி பாரன்ஹீட்

ராணிப்பேட்டை, வேலூர்- தலா 106 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி கிருஷ்ணகிரி- 105 டிகிரி பாரன்ஹீட்

கடலூர் விருதுநகர்- 104 டிகிரி பாரன்ஹீட்

சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை - தலா 101 டிகிரி பாரன்ஹீட்

மதுரை -100 டிகிரி பாரன்ஹீட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெயில் பதிவாகியுள்ளது.