ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 1ம் தேதி இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இறைச்சி வழங்க தடை செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறியிருப் பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாகவும், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மே 1ம் தேதி (நாளை) இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இறைச்சி வகைகளை விற்க தடை விதிக்கப்படுகிறது. இறைச்சி வாங்க செல்லும் பொது மக்கள் அதற்கு தேவையான சாமான்கள் மற்றும் துணிபைகள் ஆகியவற்றை வீட்டில் இருந்து கொண்டு சென்று இறைச்சியை வாங்கி செல்ல வேண்டும்.

அதேபோல், வியாபாரிகளும் இறைச்சி வகை களை வாழை இலை, மந்தாரை இலை ஆகிய வற்றில் பார்சல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயனபடுத்தும் கடைகள் மீண்டும் வியாபாரம் செய்ய தடைவிதிக்கப்படும்.

இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பிளாஸ்டிக் இல்லாராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்க பொதுமக்களும், வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.