Unemployed youth in Ranipettai can apply for the scholarship- Collector Information

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1.1.2017 முதல் 31.3.2017 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள

பட்டப்படிப்பு, மேல்நிலை கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் (9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதி தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும்) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்புகள் ஆண்டிற்கு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

www.tnvelaivaaippu.gov.in அல்லது https//tnvelaivaaippu.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணணீப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலை நாட்களில் நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்/தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 45 வயதுக்குள், இதர வகுப்பினர் 40 வயதிற்குள், ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகக் கூடாது. முழு நேர கல்வி பயிலும் மாணவர் ஆக இருத்தல் கூடாது. எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி ரூ.200, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி ரூ.400, பட்டப் படிப்பு/பட்டமேற்படிப்பு ரூ.600 வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் வருவாய்த் துறையின் ஒட்டுமொத்த சான்றுடன் உதவி தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து ஓராண்டு கழித்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.அவ்வாறு புதுப்பித்தல் செய்த விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் உதவித் தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.