👉 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய மதகுரு ராகுல் சாங்கிருத்யாயன் மறைந்தார்.
👉 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி மறைந்தார்.
👉 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியப் பொறியியலாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா மறைந்தார்.
முக்கிய தினம் :-
🌹 உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது.
🌹 சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
🌺 பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
🌷 தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே, தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீத்தடுப்பு தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
பிறந்த நாள் :-
🌟 இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.
🌟 இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
🌟 உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.
🌟 1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.
🌟 தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் தனது 65வது வயதில் (1956) மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
இன்றைய தின நிகழ்வுகள்
69 – ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார்.
193 – செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1028 – மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார்.
1471 – இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்டு நெவிலைத் தோற்கடித்து அவரைக் கொன்றன. நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக மீண்டும் முடிசூடினார்.
1699 – நானக்சாகி நாட்காட்டியின் படி, கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குரு கோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
1816 – பிரித்தானிய-ஆட்சியின் கீழிருந்த பார்படோசுவின் அடிமையான பூசா அடிமைக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிச் சென்று இறந்தார். பார்படோசுவின் முதலாவது தேசிய வீரர் என இவர் மதிக்கப்படுகிறார்.
1828 – நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
1849 – அங்கேரி ஆத்திரியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1865 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார். லிங்கன் அடுத்த நாள் இறந்தார்.
1890 – அமெரிக்க நாடுகள் அமைப்பு வாசிங்டனில் அமைக்கப்பட்டது.
1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
1909 – உதுமானியரினால் சிலிசியா என்ற ஆர்மீனிய நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1912 – பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் ஏப்ரல் 15 அதிகாலையில் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.
1915 – துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.
1928 – பிரெமென் என்ற செருமானிய வானூர்தி கனடாவின் கிரீனி தீவை அடைந்தது. கிழக்கில் இருந்து மேற்கே அத்திலாந்திக் பெருங்கடலை வெற்றிகரமாகத் தாண்டிய முதலாவது வானூர்தி இதுவாகும்.
1931 – எசுப்பானியப் படைத்தளபதிகள் மூன்றாம் அல்போன்சோ மன்னரைப் பதவியில் இருந்து அகற்றி இரண்டாவது எசுப்பானியக் குடியரசை அறிவித்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமானிய இராணுவத் தளபதி இர்வின் ரோமெல் துப்ருக்கை முற்றுகையிட்டான்.
1944 – மும்பை துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1958 – லைக்கா என்ற நாயை விண்ணுக்குக் கொண்டு சென்ற சோவியத்தின் இசுப்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்றுப்பாதையில் இருந்து வீழ்ந்தது.
1967 – ஞாசிங்பே எயதேமா டோகோவின் அரசுத்தலைவர் நிக்கொலாசு குருநித்ஸ்கியை வீழ்த்தி தன்னை புதிய அரசுத்தலைவராக அறிவித்தார். இவர் அடுத்த 38 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தினார்.
1978 – ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
1981 – கொலம்பியா விண்ணோடம் தனது முதலாவது சோதனைப் பறப்பை முடித்துக் கொண்டது.
1986 – வங்காள தேசத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 1 கிகி எடையுள்ள ஆலங்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
1988 – சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
1994 – ஈராக்கின் வடக்கே இரண்டு ஐக்கிய அமெரிக்க வான்படை வானூர்திகள் தவறுதலாக இரண்டு அமெரிக்க இராணுவ உலங்குவானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – ஆத்திரேலியா, சிட்னியில் பலமான ஆலங்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
2003 – மனித மரபணுத்தொகைத் திட்டம் நிறைவடைந்தது.
2006 – தில்லி, ஜாமா பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 13 பேர் காயமடைந்தனர்.[1]
2010 – சிங்காய் நிலநடுக்கம், 2010: 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,700 பேர் உயிரிழந்தனர்.
2014 – நைஜீரியாவில் அபுஜா நகரில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டனர், 141 பேர் காயமடைந்தனர்.
2014 – நைஜீரியாவில் 276 பாடசாலை மாணவிகள் போகோ அராம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.
இன்றைய தின பிறப்புகள்
1126 – இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198)
1629 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர், வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1695)
1866 – ஆனி சலிவன், அமெரிக்கக் கல்வியாளர் (இ. 1936)
1889 – அர்னால்ட் ஜோசப் டாயின்பீ, ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 1975)
1891 – அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர், அரசியல்வாதி (இ. 1956)
1907 – எம். ஆர். ராதா, தமிழக நகைச்சுவை நடிகர் (இ. 1979)
1913 – என். ஆர். தியாகராசன், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)
1916 – இலாரன்சு ஆகுபென், நியூசிலாந்து வானிலையியலாளர் (இ. 2015)
1919 – சம்சாத் பேகம், பாக்கித்தானிய-இந்திய பாடகி (இ. 2013)
1919 – கே. சரஸ்வதி அம்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1975)
1922 – அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)
1923 – ஜான் ஹோல்ட், அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1985)
1927 – பி. ஏ. பெரியநாயகி, திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி (இ. 1990)
1933 – யூரி ஒகனேசியான், ஆர்மேனிய-உருசிய அணுக்கரு இயற்பியலாளர்
1935 – எரிக் வான் டேனிகன், சுவிட்சர்லாந்து வரலாற்றாளர்
1942 – மார்கரட் அல்வா, இந்திய அரசியல்வாதி
1950 – எச். வசந்தகுமார், தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2020)
1956 – ஏ. கே. நாதன், மலேசியத் தொழிலதிபர், கட்டிடக் கலைஞர்
1979 – சி. வி. குமார், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
இன்றைய தின இறப்புகள்
1759 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசையமைப்பாளர் (பி. 1685)
1924 – லூயிசு சலிவன், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1856)
1904 – வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)
1905 – ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1819)
1930 – விளாடிமிர் மயாகோவ்ஸ்கி, ஜியார்சிய-உருசிய நடிகர், கவிஞர் (பி. 1893)
1935 – எம்மி நோய்தர், செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1882)
1944 – மேரி அடேலா பிளேக், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1858)
1950 – இரமண மகரிசி, தமிழக ஆன்மிக குரு, மெய்யியலாளர் (பி. 1879)
1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்திய பொறியியலாளர் (பி. 1860)
1963 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மதகுரு, வரலாற்றாளர் (பி. 1893)
1964 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)
1986 – சிமோன் த பொவார், பிரான்சிய எழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1908)
2011 – வே. பாக்கியநாதன், தமிழகப் பத்திரிகையாளர் (பி. 1946)
2013 – பி. பி. ஸ்ரீனிவாஸ், தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930)
இன்றைய தின சிறப்பு நாள்
அம்பேத்கர் ஜெயந்தி (இந்தியா)
உலக சித்தர்கள் நாள்