👉 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி ஆங்கில கவிஞர், ஓவியர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளரான டேன்டி கெய்பிரியல் ரோசட்டி மறைந்தார்.

👉 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க உயிரியலறிஞர் கிரிகோரி குட்வின் பிங்கஸ் பிறந்தார்.

👉 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க வானியலாளர் தோரித் கோப்லீட் மறைந்தார்.


பிறந்த நாள் :-


ராகுல் சாங்கிருத்தியாயன்

✍ இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படுபவரும், மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sankrityayan) 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே.

✍ இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய 'வால்கா ஸே கங்கா' நூல் வேதகாலத்திற்கு முந்தைய நாட்களிலிருந்து 1944ஆம் ஆண்டு வரையிலான காலக் கண்ணாடி. இந்த வரலாற்றுப் புனைவு நூல் மொத்தம் 14 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

✍ இவர் புத்த துறவியாக மாறிய பிறகு தன் பெயரை ராகுல் சாங்க்ருத் தியாயன் என்று மாற்றிக்கொண்டார். இவர் முறைப்படி கல்வி எதுவும் கற்கவில்லை என்றாலும் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராக நியமித்தது.

✍ இவர் சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண் விருது, மகாபண்டிட் உள்ளிட்ட பல பட்டங்களையும் பெற்றுள்ளார். மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது, சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.

✍ அறிவுக்கடல், தத்துவஞானி, மகாபண்டிதர் என்று போற்றப்படும் ராகுல் சாங்க்ருதியாயன் 1963ஆம் ஆண்டில் தனது 70வது வயதில் மறைந்தார்.


சரண் ராணி பாக்லீவால்

🎶 இந்துஸ்தானி சங்கீத மேதையும், புகழ்பெற்ற சரோட் வாத்தியக் கலைஞருமான சரண் ராணி பாக்லீவால் (Sharan Rani Backliwal) 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

🎶 1930ஆம் ஆண்டு முதல் மேடை கச்சேரிகளில் சரோட் வாசிக்க ஆரம்பித்தார். ஆண்கள் மட்டுமே வாசித்த சரோட் இசையில் இவரும் வல்லமை பெற்றார். இசைக்கலைஞர் என்ற வகையில் உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் இவர்தான்.

🎶 இவர் இந்திய பாரம்பரியத்தை நிலைப்படுத்துவதற்காக அரிதான 450 வாத்தியங்களை சேகரித்து அதை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

🎶 இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தேசிய கலைஞர், சாகித்ய கலா பரிஷத் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 'இந்தியாவின் கலாச்சாரத் தூதர்' என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்டவர்.

🎶 'சரோட் ராணி' என போற்றப்பட்ட இவர் 78வது வயதில் (2008) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


190 – தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.

1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.

1288 – மங்கோலியரின் வியட்நாம் படையெடுப்பு: பாக் டாங் (இன்றைய வடக்கு வியட்நாம்) சமரில் யுவான் படைகள் திரான் படைகளிடம் தோற்றன.

1413 – ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார்.

1440 – பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார்.

1609 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியாவும் இடச்சுக் குடியரசும் 12 ஆண்டுகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1860 – எதுவார்து-லேயோன் இசுக்காட் டெ மார்ட்டின்வில் என்பவர் தனது போனோட்டோகிராஃப் இயந்திரத்தில் முதல் தடவையாக மனித ஒலியைப் பதிவு செய்தார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தளபதி ராபர்ட் ஈ. லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வர்ஜீனியாவில் யுலிசீஸ் கிராண்ட்டிடம் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமரில், செருமனிப் படைகள் தமது மூன்றாவது தாக்குதலை ஆரம்பித்தன.

1937 – கமிக்காசு என்ற வானூர்தி இலண்டன் வந்தது. இதுவே சப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி ஆகும்.

1940 – இரண்டாம் உலகப் போர்: வெசெரியூபங் நடவடிக்கை: டென்மார்க், நோர்வே மீது செருமனி தாக்குதலை ஆரம்பித்தது.

1940 – விட்குன் குவிசிலிங்கு நோர்வேயின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை இலங்கையின் திருகோணமலை நகரைத் தாக்கியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பட்டான் சமர் முடிவுற்றது. சப்பானின் 1-ஆம் வான்படை இந்தியப் பெருங்கடலில் நடத்திய தாக்குதலில் பிரித்தானியாவின் எர்மெசு என்ற வானூர்தித் தாங்கிக் கப்பல், ஆத்திரேலியாவின் வம்பயர் என்ற போர்க் கப்பல் ஆகியன மூழ்கின.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் அட்மிரல் சீர் என்ற போர்க்கப்பல் பிரித்தானிய வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.

1947 – அமெரிக்காவில் டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கேன்சசு மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்தனர்.

1948 – எருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் சீயோனிசத் துணை இராணுவக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

1952 – ஊகோ பாலிவியானின் அரசு பொலிவிய தேசியப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் வேளாண்மைச் சீர்திருத்தம், பொது வாக்குரிமை, தேசியமயமாக்கல் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.

1957 – சூயெசு நெருக்கடி: எகிப்தில், சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலன்ப்பிரச்சினைத் தீர்வுக்காக ஏற்றுக் கொண்ட பண்டார-செல்வா ஒப்பந்தத்தை பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை அடுத்து மீளப்பெறுவதாக அறிவித்தார்.[1]

1959 – மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.

1967 – போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1969 – முதலாவது பிரித்தானியத் தயாரிப்பான கான்கோர்டு 002 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1984 – யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

1984 – இலங்கை இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.

1989 – திபிலீசி படுகொலை: ஜோர்ஜியாவில் சோவியத்-எதிர்ப்புப் போராட்டத்தின் போது சோவியத் இராணுவத்தினரால் மக்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

1991 – ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

1992 – முன்னாள் பனாமா அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.

2003 – பக்தாத் நகரை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

2005 – இளவரசர் சார்லசு கார்ன்வால் இளவரசி கமில்லாவைத் திருமணம் புரிந்தார்.

2009 – சியார்சியா தலைநகர் திபிலீசியில், 60,000 பேருக்கு மேல் மிக்கைல் சாக்கஷ்விலி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

2013 – ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர், 850 பேர் காயமடைந்தனர்.

2017 – குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்பு: எகிப்தில் டன்டா, அலெக்சாந்திரியா நகரங்களில் உள்ள கோப்திக்குத் தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்


1285 – புயந்து கான், சீன, மங்கோலியப் பேரரசர் (இ. 1320)

1336 – தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (இ. 1405)

1893 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மொழியியலாளர் (இ. 1963)

1899 – முசிரி சுப்பிரமணிய ஐயர், கர்நாடக இசைப் பாடகர் (இ. 1975)

1902 – ஓல்கா பெரோவ்ஸ்காயா, சோவியத் குழந்தைகள் எழுத்தாளர் (இ. 1961)

1903 – கிரிகோரி குட்வின் பிங்கஸ், அமெரிக்க உயிரியலறிஞர்.(இ. 1967)

1911 – பால் வெயிஸ், செருமன்-பிரித்தானிய கணித, கோட்பாட்டு இயற்பியலாளர் (இ. 1991)

1917 – பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் ரோமன் கத்தோலிக்க ஆயர் (இ. 2003)

1918 – ஜோர்ன் உட்சன், சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைத்த தென்மார்க்கு கட்டிடக்கலைஞர் (இ. 2008)

1921 – மேரி ஜாக்சன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியியலாளர் (இ. 2005)

1926 – ஹியூ ஹெஃப்னர், அமெரிக்கப் பதிப்பாளர்

1929 – சரண் ராணி பாக்லீவால், இந்திய இசைக்கலைஞர் (இ. 2008)

1948 – ஜெயபாதுரி, இந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி

1954 – ஆதித்தியன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2017)

1967 – சாம் ஆரிசு, அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர், அறிவியலாளர்

1968 – ஜெய் சந்திரசேகர், அமெரிக்க நடிகர்

1971 – விக்னேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர்

1974 – ஜென்னா ஜேமிசன், அமெரிக்க நடிகை

1982 – ஜே பருச்செல், கனடிய நடிகர்

1987 – ஜெசி மெக்கார்ட்னி, அமெரிக்கப் பாடகர், நடிகர்

1988 – சுவரா பாஸ்கர், இந்திய நடிகை

1990 – கிறிஸ்டென் ஸ்டீவர்ட், அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்


1626 – பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய அரசியல்வாதி, மெய்யியலாளர் (பி. 1561)

1882 – டேன்டி கெய்பிரியல் ரோசட்டி, ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (பி. 1828)

1918 – நிக்கோ பிரொசுமானி, சியோர்சிய ஓவியர் (பி. 1862)

1959 – பிராங்க் லாய்டு ரைட், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1867)

2007 – தோரித் கோப்லீட், அமெரிக்க வானியலாளர் (பி. 1907)

2021 – எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப், (இ. 1921)

இன்றைய தின சிறப்பு நாள் 

செருமானியப் படையெடுப்பு நினைவு நாள் (டென்மார்க்)

பக்தாது விடுதலை நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)