Subsidy for setting up aquaculture ponds in Ranipettai district Collector information

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டிற்கு புதிய மீன் வளர்ப்பு குளங்கள் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க மற்றும் உள்ளீட்டு செலவினம் என திட்ட மொத்த செலவீனம் ரூ.7 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.

பொதுப்பிரிவினர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ½ ஹெக்டேர் பரப்பளவிற்கு மீன் குளம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், 5-வது மேற்கு குறுக்கு தெரு, காந்தி நகர், காட்பாடி, வேலூர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் adfifvellore1@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.