சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். அவரது மனைவி சத்யவாணி (32). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது. இவர் கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ் பணிபுரிந்து வந்தார். 

ஆக நேற்று முன்தினம் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மதிவாணன் வீட்டை விட்டு வெளியே சென்றார். 

இந்நிலையில் சத்யவாணி வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பொன்மொழி கொடுத்த புகாரின் பேரில் கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.