உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ் படைப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து அரக்கோணம் டவுன் ஹாலில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.

தமிழ் படைப்பாளர்கள் சங்க தலைவர் மோகன் தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சுப்பிரமணியம், சப்கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், தமிழ் படைப்பாளர்கள் சங்க கவுரவ ஆலோசகர் வெங்கட்ரமணன் வரவேற்றார். 

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும். வாசிப்பு திறன் அதிகரித்தால் தீய பழக்கங்கள் அதிகம் வராது. போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை படித்து அரசு வேலைக்கு செல்லலாம் என்றார்.

'ஏப்.23ம் தேதி வரை கண் காட்சி நடக்கிறது.