ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா, சாராயம், உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

அதன்படி காவல் துறையினரும் பல இடங்களில் இதுபோன்ற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் வடமாநில சேர்ந்தவர்களை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆந்திர பெங்களூர் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து இரவு நேரத்தில் மாவட்டத்தின் உள்ளே சில கனரக வாகனங்களில் மூலம் பான்மசாலா குட்கா, கஞ்சா அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்ளே வாகனங்களில் வருவதால் அதை முழுவதுமாக தடுப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் இன்று முத்துக்கடை பேருந்து நிலையத்தில் காவலர்களோடு தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த எஸ். பி அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் ஆகியவை மடக்கி பிடித்து ஆவணங்களை சரிபார்த்து முழுமையாக ஆய்வு செய்தார்.