ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, நவ்லாக் பஞ்., அவரக்கரை பஜனை கோயில் தெருவில் வசித்து வந்த அரவிந்தன். இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

அப்பா இல்லை. இவரின் தாயார் பொற்கொடியும், மனைவி நிவேதாவும் அவரைக்கரையில் வசித்து வந்தனர். இந்நிலையில் அரவிந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்து கடந்த 21.03.2021 அன்று இறந்துவிட்டார். இந்நி லையில் அரவிந்தன் வேலை செய்த நிறுவனத் திலிருந்து நிவாரணத் தொகை வந்தது.

அதை அரவிந்தனின் தாயாருக்கு ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 445ம் மனை விக்கு ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 446 என்று பிரித்து நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

டிஆர்ஓ குமரேஷ்வரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலர் சேகர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இளவரசி ஆகியோர் உடன் இருந்தனர்.