குறள் : 719

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்

மு.வ உரை :

நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர் அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

கலைஞர் உரை :

நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

சாலமன் பாப்பையா உரை :

நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

Kural 719

Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul
Nankusalach Chollu Vaar

Explanation :

Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low

Horoscope Today: Astrological prediction for April 13, 2022


இன்றைய ராசிப்பலன் - 13.04.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

13-04-2022, பங்குனி 30, புதன்கிழமை, துவாதசி திதி பின்இரவு 04.50 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மகம் நட்சத்திரம் காலை 09.36 வரை பின்பு பூரம். சித்தயோகம் காலை 09.36 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம்

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 13.04.2022 | Today rasi palan - 13.04.2022

மேஷம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.

ரிஷபம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வம்பு வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று கால தாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் வேற்று மொழி நபர்களின் உதவியால் அனுகூலங்கள் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதையும் நிதானமாக செய்வது நல்லது. பணியில் கவனம் தேவை.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். பொன் பொருள் சேரும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,