வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஆற்காடு நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய எஸ்பி தீபா சத்யன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி பிரபு, ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் கஞ்சா விற்பனை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆற்காட்டைச் சேர்ந்த ரவி(37) என்பவரை கடந்த 2ம் தேதி ஆற்காடு டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவியின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபா சத்யன், கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந் துரைத்தார். அதன்பேரில் ரவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார். 

இதையடுத்து, போலீசார் ரவியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.