30 வயதை நெருங்குபவரா நீங்கள்? 

அப்போ இதையெல்லாம் செய்ய தொடங்குங்கள்...

1.மாத சம்பாளத்தை மட்டும் நம்பி இல்லாமல், share market (SIP/Stocks) போன்ற விஷயங்களை பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்து, சிறிதளவே ஆயினும் (மாதம் 500, 1000 கூட போதும்) முதலீடு செய்ய தொடங்குங்கள். வரும் காலங்களில் பங்குசந்தையில் முதலீடு செய்யாத ஆட்களே இல்லாத நிலை விரைவில் உருவாகப்போகிறது.

2.பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீடு கண்டிப்பாக எடுத்து வையுங்கள். எதிர்பாராத மருத்துவ செலவில் தான் நிறைய நடுத்தர வயதினரின் சேமிப்பு கரையத் தொடங்குகிறது.

3.பெண்/ஆண் தயாராக இருந்தால், கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். கால தாமதம் வேண்டாம். 30க்குள் திருமணம் செய்தால் சிறந்தது.

4.உடல் நம் சொல்பேச்சு கேட்காமல் போகக்கூடிய நேரம் விரைவில் வரும். நடை பயிற்சி அல்லது ஏதேனும் ஒத்த உடற்பயிற்சியில் வாடிக்கையாக ஈடுபட தொடங்குங்கள். கலோரிகள் அதிகம் உள்ள உணவை தவிர்க்கத் தொடங்குங்கள்.

5.உங்கள் துறையில் ஏதேனும் பயிற்சி அல்லது சான்று தேவைபட்டால், கண்டிப்பாக அதை தொடங்குங்கள் (உதாரணம்: Scrum Master, PMP, Agile, Foreign Language courses >C1 Level, etc.,) 30க்கு மேல் படிப்பில் ஆர்வம் இருந்தாலும் மூளை முழுதாக ஒத்துலைக்காது.

6.ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்காவது சென்று வாருங்கள். துபாய்க்கு டிக்கெட் போகவர விலை 18000க்கும் குறைவாக கிடைக்கிறது. உங்கள் சிந்தனை விரிவடையும். உலகத்தை பற்றிய உங்கள் பார்வை முற்றிலும் மாறும்.

7.கோபத்தை காட்டியே ஆக வேண்டும் என்ற வீம்பு குணத்தை குறைத்து கொள்ளுங்கள். 30 வயதிற்கு மேல் எளிதாக எதிரிகளை சம்பாதிக்க முடியும். தவறாக எடுத்துக்கொள்ள கூடிய சிறிய வார்த்தை கூட போதுமானது. பேச்சில் கவனத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

8.சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். நம்மில் பலர், முக்கியமாக ஆண்களுக்கு வாழ்நாள் முழுதும் அம்மாவோ, அக்காவோ, மனைவியோ சமைத்து கொடுத்திருப்பார்கள். நம்மை நாமே அவசர காலத்தில் காப்பாற்றிக்கொள்ள எளிமையான சில உணவு வகைகளை சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். கைகொடுக்கும்.

9. DIY (Do It Yourself) வாழ்க்கைமுறையை முயற்சி செய்யத்தொடங்குங்கள் பிளம்பிங், வயரிங்,போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்ட தொடங்குங்கள் பிளம்பர், electrician போன்றவர்களை எப்போதும் நம்பி இருக்க வேண்டாம்.

10. இது தான் ரொம்ப முக்கியம் "ஸ்மார்ட்போன்" உபயோகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் மொபைலை நோண்டி கொண்டிருப்பதுதான் இக்காலத்தில் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது.