பாணாவரம் அடுத்த காட்டுப் பாக்கம் அரசு பள்ளி மாணவன் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றான்.

சோளிங்கர் ஒன்றியம் கரடிகுப்பம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இப்போட்டியில் பாணாவரம் அடுத்த காட்டுப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்தீப் ரோஷன் என்பவர் கலந்து கொண்டு, 50க்கு 49 திருக்குறள்களை ஒப்புவித்து 2ம் பரிசு மற்றும் கோப்பையை பெற்றார். இதையடுத்து, பள்ளி இறைவணக்க நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் புவியரசு. ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் மாணவன் சந்தீப் ரோஷனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.