ராணிப்பேட்டை மாவட்டம்,மகளிர் திட்டம் மூலம் பண்ணை (ம) பண்ணை சாரா செயல்பாடுகள் செயல் படுத்தும் பொருட்டு இரண்டு எண்ணிக்கையிலான மாநில அளவிலான பயிற்றுநர்களை தேர்வு செய்ய விண்ணப்பிக்கலாம். இந்த பணி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் இருக்கும். தகுதியின் அடிப் படையில் நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3ஆயிரத்து 500 வரை வழங்கப்படும். பண்ணை சார்ந்த மாநில அளவிலான பயிற்றுநருக்கு விவசாயம் அல்லது கால்நடை அறிவியல், தோட்டக்கலைத்துறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பண்ணை சாரா மாநில அளவிலான பயிற்றுநருக்கு ஊரக வளர்ச்சி சமூக பணி, வணிக மேலாண்மையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் வணிக மேலாண்மையில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2 முதல் 10 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுத, படிக்க தெரி தவராக இருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேற்காணும் வேலைக்கான விண்ணட பத்தினை 29.03.2022 க்குள், திட்ட இயக்குநர், மகளி திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாததாங்கல் ரோடு ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, கலெடர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். நேர்மு தேர்வு வரும் 04.04.2022 அன்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்.