வெற்றிலை பரிகாரம் 💚 | Vetrilai Pariharam in Tamil

வெற்றிலையை 12 ராசிகளுக்கேற்ப பயன்படுத்தி நம் துன்பங்களிிலிருந்து விடுபடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?.. 

Did you know that we can get rid of our misery by using betel leaf according to the 12 zodiac signs? ..


இதோ தெரிந்து அதன்படி செய்து துன்பங்களில் இருந்து விடுபடலாமே.

வெற்றிலையை சுபகாரியங்களுக்கும் , நாம் உணவிற்குபின் போட்டு்க் கொள்வதற்கும்..மருந்துகளுக்கு மட்டுமே நாம்பயன்படுத்துவது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் நமது ராசிகளுக்கேற்ப அதனை பயன்படுத்தி நம் துன்பங்களிிலிருந்து விடுபடலாம் என்பது தெரியுமா..இதோ தெரிந்து அதன்படி செய்துதுன்பங்களில் இருந்து விடுபடலாமே.


மேஷம்:

வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.

ரிஷபம்:

வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

மிதுனம்:

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கடகம்:

வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.

சிம்மம்:

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.

கன்னி:

வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

துலாம்:

வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

விருச்சிகம்:

வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

தனுசு:

வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

மகரம்:

வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

கும்பம்:

வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

மீனம்:

வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.