ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். 
அதுகுறித்த விவரம்: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையரக கண்காணிப்பாளர் பாலசந்தர், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில் தாராகவும், அங்கிருந்த சரஸ்வதி அரக்கோணம் தாலுகா அலுவலகதேர்தல் துணை தாசில்தாராகவும், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் சத்யா, கலவை தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த பாஸ்கர் கலெக்டர் அலுவலக ஜி பிரிவு கண்காணிப்பாளராகவும், கலவை தாலுகா துணை தாசில் தார் இந்துமதி வாலாஜா தாலுகா அலுவலக தேர்தல் துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வாலாஜா தாலுகா அலுவலக துணை தாசில்தார் இளையராஜா கலவை தாலுகா அலுவலக தலைமையி டத்து துணை தாசில்தாராகவும், சோளிங்கர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியலட்சுமி கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு கண்காணிப்பாளராகவும். ஆற்காடு தாலுகா தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் சோளிங்கர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜலட்சுமி வாலாஜா தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும், ராணிப் பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக துணை தாசில்தார் சரவணன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.