Today valar pirai pradhosham worship the poisoned Neelakandar Shiva!


ஈசன் தயாபரன். அவர் குறித்து திருமூலர், 'மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்' என்பார். தேவர்களுக்காக நஞ்சை உண்ட தேவன் சிறிது நேரம் மயங்கியிருந்தார். 

உண்ட விஷம் வயிற்றுக்குள் செல்லாதவாறு அன்னை உமையவள் கழுத்தோடு நிறுத்தி, அவரை நீலகண்டர் ஆக்கினாள். இந்தப் பிரபஞ்சத்து உயிர்கள் எல்லாம் ஆலகாலத்திலிருந்து தப்பின. 

தேவர்கள் மயக்கமுற்ற ஈசனைக் கண்டு வருந்தினர். அவர் மீண்டும் மயக்கம் தெளிந்து எழவேண்டும் என்று உண்ணா நோன்பிருந்தனர். 

அன்று ஏகாதசி திதியாக இருந்ததால் அவர்களின் விரதம் பலித்தது. மறுநாள் துவாதசி அன்று அவர்கள் பாரணை செய்து விரதம் முடித்தனர். மறுநாள் திரயோதசி. ஈசன் தன் யோக நித்திரை போன்ற மயக்கத்தில் இருந்து மீண்டார். 

பாற்கடலை மீண்டும் கடைய உத்தரவிட்டார். அஷ்ட ஐஸ்வர்யங்களும் வந்தது. ஈசன் மனம் மகிழ்ந்து, அந்த நாளின் மாலையில் ஆனந்தக் கூத்தாடினார். அதுகண்டு தேவர்கள் அனைவரும் அவரைத் துதித்தனர். அந்த வேளையே பிரதோஷமாக போற்றப்பட்டது.