காவேரிப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி மாணவி பலியானார்.

Student killed by electric shock near Kaveripakkam


காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகள் ஷாலினி(15), 9ம் வகுப்பு மாணவி. இவர் நேற்று காலை தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டர் பிளக் எடுத்து மின் பாக்சில் இணைத்துள்ளார். அப்போது எதிர் பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கிவீ சப்பட்டு மயக்கமடைந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே ஷாலினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.