ஒரு சில வரிகளில் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 

Ragu Kethu shift benefits in a few lines


மேசம்

உடல் நலம் பேணுங்கள், துணையின் உடல் நலமும், சேமிப்பு கரையும், ரத்தம் தொடர்பான பிரச்சினைகள் வரும் அதிக கவனம். காளஹஸ்தி சிவனே துணை.

ரிசபம்

கண்களை கட்டி கொள்ளுங்கள், எதையும் எதிர் கொள்ளுங்கள், வெற்றி வெற்றி வெற்றி , துர்கையம்மன் துணை 

மிதுனம

எதிலும் லாபம் எல்லாம் லாபம் கடன் அடையும் நோய் தீரும் நினைத்தது நிறைவேறும். குலதெய்வம் துணை 

கடகம்

அட புதிய தொழில் வாய்ப்பு தேடி வரும். வரவு திருப்தி, உடல்நலம் கவனம், தாயார் உடல்நலம் கவனம், மருத்துவ செலவுக்கு பணம் தயாராக வைத்துகொள்வது நல்லது. வைத்தீஸ்வரன் துணை

சிம்மம்

ஸ்ஸ் யப்பா, உடல்நல கோளாருகள் தீரும். மன நலம் சரியாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். நரசிம்மர் துணை

கன்னி

பாவம் எவ்வளவு துன்பம், எல்லாம் சரியாகும். வருமானம் திருப்தி உடல் நலம் திருபதி உளவு மற்றும் பிரிட்ஜ் உணவு கவனம் தேவை, ஓட்டல் உணவு தவிர்க்க, திருமலை திருப்பதி துணை

துலாம்

எத்தனை கோடி துஇ)ன்பம்? வைத்தாய் இறைவா ? இனியெல்லாம் சுகமே, வரவு திருப்தி, நினைத்தது நிறைவேறும், ஆனால்.... இன்ஸ்டன்ட் முடிவு எடுக்க கூடாது, ஆலோசனை பெறுவது அவசியம், காளியம்மன் துணை

விருச்சிகம்

நீண்ட பெருமூச்சு விடுங்கள், துன்ப துயரம் நீங்கி விட்டது, வழக்கு சாதகம், வருமான தடை நீங்கியது. கடன் தீரும், நினைத்து நிறைவேறும். தில்லை காளி துணை

தனுசு

உழைப்பே உயர்வு, தீவிர செயல்பாடு, எண்ணம் செயலாகும். பழி உணர்ச்சி வேண்டாம். எல்லாம் நன்மைக்கே, பணத்தை தங்கம் நிலம் என முதலீடு செய்வது நன்மை, மறவாதீர் குலதெய்வம் துணை 

மகரம்

மனம் தெளிவாகும், குணம் சிறப்பாகும். சும்மா இருந்தாலே சொத்து சேரும், பல தொழில் வாய்க்கும்.. தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். அல்லது...!? சரி சரி தேனி குச்சனூர் சனி பகவான் துணை
.

கும்பம்

தடைகள் தகரும், எதிரிகள் தூளாவார்கள், விரும்பிய மாற்றம் உண்டு, பண வரவு முதலீடாகும். சொத்து சேர்க்கை ம்ம்ம் சூப்பர். சிவனே போற்றி

மீனம்

முயற்சி எல்லாம் வருமானமாகும். பூமி தொழில் சிறப்பு, செல்வம் சேரும், வரவு சிறப்பு, குடும்பம் விருத்தி, ரங்கநாதர் துணை

ஜோதிடர் மு. விக்ரமாதித்தன் ஆச்சார்யா