ஆற்காட்டில், தெரு நாய்கள் கடித்து 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

In Arcot, 6 children were seriously injured after being bitten by street dogs


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு குட்டக்கரை தெருவில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றிக் கொண்டுள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு அந்த பகுதியில் நடந்து சென்ற 6 குழந்தைகளை கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த அவர்களை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆற்காடு பகுதியில் சுற்றிக் கொண்டுள்ள நுாற்றுக்கணக்கான தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும்படி பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.