குறள் : 679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்
மு.வ உரை :
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல் நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
கலைஞர் உரை :
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.
Kural 679
Nattaarkku Nalla Seyalin Viraindhadhe
Ottaarai Ottik Kolal
Explanation :
Rather than bestow kind favors on friends Hasten to befriend your unkind enemies.
Horoscope Today: Astrological prediction for March 04, 2022
இன்றைய ராசிப்பலன் - 04.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
04-03-2022, மாசி 20, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 08.45 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.51 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
Today rasi palan - 04.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 04.03.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
துலாம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கும்பம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,