ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலை மேடு சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வயது ஆண் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதிமக்கள் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனச்சரக அலுவலர் கந்தசாமி மற்றும் வனவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 2 வயது புள்ளி மானை மீட்டனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆற்காடு கால்நடை மருத்துவர் டாக்டர் கவுரி ப்ரியா தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இறந்த புள்ளி மான் உடலை அம்மூர் வன காப்பு காட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு எரிக்கப்பட்டது.