தொழிற்சாலை நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

The consultation meeting with the factory executives was chaired by the Police Superintendent Deepa Sathyan


ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தொழிற்சாலை நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், தொழிற்சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு அதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் பாதுகாப்பான தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக ராணிப்பேட்டை உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டு கொண்டார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துக் கருப்பன் (சைபர் குற்றப்பிரிவு), பிரபு (ராணிப்பேட்டை), புகழேந்தி கணேஷ் (அரக்கோணம்) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தொழிற்சாலைகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.