நாளை, நாளை மறுதினம் பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஓடாது" என சிஐடியூ சங்கம் அறிவித்துள்ளது.

Bus and auto will not run from tomorrow big Announcement



மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து திட்டமிட்டபடி நாளை மற்றும் நாளை மறுநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மத்திய அரசை கண்டித்து, நாளையும், நாளை மறுதினமும் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் ஆட்டோக்கள், கால்டாக்சிகள்  ஓடாது என்று  சிஐடியூ பொது செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜகவின் தொழிற் சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கத்தை (பி.எம்.எஸ்)தவிர்த்து மற்ற பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளன. அதன்படி நாளை நடைபெற கூடிய போராட்டத்தில் 9க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் தினந்தோறும் இயக்கப்படும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.