ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்பு துறையில் இளைஞர் நீதிக்குழும சமூகநல உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015ம் ஆண்டு இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்ட விதி முறைகளின் படி அமைக்கப்பட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இளைஞர் நீதிக்குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூகநல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி குழந்தைகளுக்கான நல பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் ஈடுபட்டோர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம். சமூகநலம், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 35 வயது குறையா தவராகவும், 65 வயது பூர்த்தி செய்யாதவராக இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தியுடையவராவர்.
தொடர்ந்து இரு முறை பதவிவகிக்க இயலாது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட இணையதமான http://vellore.nic.in மூலம் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்தி வெளியிட்ட 15 நாட்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் மாவட்ட பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாச்சாலை, வேலூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் நியமனம் நடைபெறும். அரசின் முடிவு இருதியானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.