Students protest by ignoring a riot class near Banavaram Kaverripakkam

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேல் வீராணம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமாா் 107 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் தலைமை ஆசிரியா் உட்பட 5-போ் பணியாற்றி வந்துள்ளனா். இந்நிலையில் மூன்று போ் பணி மாறுதல் பெற்று சென்ற நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினாலும், நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில் மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்பதாலும், மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி காவேரிபாக்கம் - பாணாவரம் சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். 
இந்நிலையில் இச் சம்பவம் அறிந்து அங்குவந்த பாணாவரம் காவல்துறையினர் மாணவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சம்மந்தபட்டதுறையினரிடம் பேசி ஆசிரியா்களை விரைந்து அமா்த்திட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துசென்றனா்.

மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவேரிப்பாக்கம் - பாணாவரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாணாவரம் அருகே பரபரப்பு: வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் மறியல்