குறள் : 694
செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து
மு.வ உரை :
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.
கலைஞர் உரை :
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.
Kural 694
Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal
Aandra Periyaa Rakaththu
Explanation :
While in the presence of the sovereign ministers should neither whisper to nor smile at others.
Horoscope Today: Astrological prediction for March 19, 2022
இன்றைய ராசிப்பலன் - 19.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
19-03-2022, பங்குனி 05, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 11.37 வரை பின்பு தேய்பிறை துதியை. அஸ்தம் நட்சத்திரம் இரவு 11.37 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
Today rasi palan - 19.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 19.03.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை அமையும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று சுமாராக இருக்கும்-. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
கடகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை அளிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். வியாபாரத்தில் லாபம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
துலாம்
இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.
விருச்சிகம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியுடன் புதிய வாய்ப்புகள் கிட்டும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோக ரீதியாக மன உளைச்சல் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
மீனம்
இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,