43,051 இடங்களில் முகாம் அமைப்பு! 

தமிழ்நாட்டில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இதையடுத்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று தவறாமல் சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமில் சொட்டு மருந்து போடப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சொட்டு மருந்து முகாமை சென்னை தேனாம்பேட்டையில் துவங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு முழுக்க இன்று பள்ளிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பால்பவாடிகள், அங்கன்வாடிகள், பொது இடங்களில் சொட்டு மருந்து போடப்பட உள்ளது. மலை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மொத்தமாக 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று சொட்டு மருந்து போடும் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு முறையும் சொட்டு மருந்து முகாம்களில் 40-50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.

அதன்படி இந்த முறை 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எப்போதும் போல இந்த முறையும் சொட்டு மருந்து போட்ட குழந்தைகளுக்கு விரலில் மை அடையாளத்திற்காக வைக்கப்படும்.

ஆனால் கொரோனா காரணமாக இந்த முறை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா இருக்கும் குழந்தைகளுக்கு இந்த முறை சொட்டு மருந்து போடப்பட்டது. அதேபோல் கொரோனா அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சனை இருக்கும் பட்சத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படாது. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறவுள்ளது. மக்கள் எல்லோரும் தங்கள் குழந்தைகளை சொட்டு மருந்து கொடுக்க அழைத்து வர வேண்டும். போலியோவை தொடர்ந்து மக்கள் கட்டுப்படுத்த வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது