ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்களையும் சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விஏஓக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அளவிலான பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நடந்து வருகிறது. இந்த முகாம்கள் மூலமாக புதிதாக தேசிய அடையாள அட்டைக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வரு கின்றனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்க ளையும் சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வி.ஏ.ஓ.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளின் முழு விவரங்களையும் சேகரித்து தனியாக ஒரு பதிவேட்டில் பதிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதன் மூலமாக பின் வரும் காலங்களில் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிக்கு உதவிகரமாக அமையும். பெயர், வயது, மருத்துவ சான்று பெற்றுள்ளாரா, ஊனத்தின் சத வீதம், ஊனத்தின் வகை, குடும்ப உறுப்பினர்கள், கல்வி தகுதி, ஆண்டு வருமானம், தனித்திறன் பெற்றவரா, எந்த வகையான தொழில் செய்ய இய லும் போன்ற விவரங்களை விஏஓக்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

இதன் மூலமாக மாற்றுத்திறனாளிக்கு வீடு. வேலை வாய்ப்பு, வங்கிக்கடன் உதவி போன்ற உதவிகளை விஏக்கள் செயல்படுத்தலாம். சுய உதவிக்குழுக்கள் உருவாக்கி அதன் மூலம் தொழில் தொடங்க வங்கிகள் மூலமாக கடன் பெற்று தரலாம். பேட்டரி பொருத்தப்பட்ட வீல் சேர். செயற்கை அவயங்கள் வழங்க இயலும். செயற்கை அவயங்கள் வழங்கும் முகாம்கள் நடத்தப்படும். அதில், செயற்கை அவயங்களுக்கு அளவு எடுக் கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. எனவே, கை, கால்கள் இழந்தவர்களின் விவரங்களையும் தனியாக சேகரிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.